கேன் வாட்டரில் உள்ளது நல்ல தண்ணீர் தானா?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (23:58 IST)
சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் தற்போது பொதுமக்கள் குடிநீருக்காக கேன் வாட்டரையே நம்பி உள்ளனர் ஓரளவு சுகாதாரமான தண்ணீர் இதில் கிடைக்கும் என்பதே பொதுமக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. ஆனால் உண்மையில் பொதுமக்கள் பயன்படுத்தும் கேன்வாட்டர் சுகாதாரமானது தானா?


 



சமீபத்தில் இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களில் பிரபலமான நிறுவனங்களின் கேன்வாட்டர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல கேன்வாட்டார் நிறுவனங்கள் ISI, FSSAI ஆகிய முத்திரைகள் இல்லாமலேயே கேன்வாட்டர் விற்பனை செய்து வருவதாகவும் ஒருசில நிறுவனங்கள் இந்த முத்திரையை போலியாக பயன்படுத்தி வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கேன்வாட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமானவை குறித்து பார்ப்போம்

1. தண்ணீர் கேன் வழங்கும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, பேட்ச் எண், CML (Central Marking License) என்ற லைசென்ஸ் எண் போன்ற தகவல்கள் தண்ணீர் கேனில் இருக்கின்றதா? என்பதை பார்த்து கேன்வாட்டர் வாங்க வேண்டும்

2.  நாம் வாங்கும் கேன் வாட்டருக்கான பில்லை கேட்டு வாங்க வேண்டும். பில் இருந்தால்தான் கேன்வாட்டரில் கலப்படம் என்றால் நடவடிக்கை எடுக்க முடியும்

3. BIS இணையதளத்துக்குச் சென்று நாம் வாங்கும் கேன்வாட்டர் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டதுதானா என்று கவனிக்க வேண்டும்.

4. கேன்வாட்டார் போலி என்று சந்தேகப்பட்டால் உடனே ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் செய்ய வேண்டும். காசு கொடுத்து நாம் குடிநீரை பெறுவதால், அந்த நீர் சுகாதாரமானதாக இருக்க வேண்டும் என்று கேட்பது நமது உரிமை
அடுத்த கட்டுரையில்