ரிலையன்ஸ் ஜியோ சிம் எங்கு கிடைக்கும்? அதனை எப்படி பெறலாம்?

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (14:45 IST)
ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ஜியோவில் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார். 


 
 
ஜியோ அளிக்கும் சலுகைகள்:
 
ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஃஆபர் என்ற பெயரில் செப்.5ம் தேதி முதல் டிச.31 வரை அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது.
 
ஜியோ 4G டேட்டா ரூ.149 (28 நாட்களுக்கு, 300 எம்.பிக்கள்) என்ற ஆரம்ப விலையில் தொடங்குகிறது. மாதம் ரூ.499 என்ற திட்டத்தில் இணைந்தால் 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதோடு, இரவு நேரத்தில் அளவில்லாத 4ஜி டேட்டாவும் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும்.
 
இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக டிசம்பர் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். 
 
ஜியோ சிம்மை எங்கு, எப்படி பெறலாம்:
 
ஜியோ சிம்கள், ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டது. தற்போது அனைவரும் இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ளாம். வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களிலும் சிம்கார்டுகள் கிடைக்கும். 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், இருப்பிட விவரம், போட்டோ அடங்கிய ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை) ஆகியவற்றின் ஜெராக்சை சமர்ப்பித்து, 4ஜி வசதி கொண்ட போனையும் காண்பித்து, சிம்கார்டை பெற்று கொள்ளலாம் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்