ரூ.244, 70 நாட்கள் வேலிடிட்டி: வோடோபோன் மாஸ்டர் ப்ளான்!!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (18:01 IST)
ஜியோவிற்கு போட்டியாக வோடோபோன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.244-க்கு 70 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


 
 
இந்த புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் வோடோபோன் டூ வோடோபோன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. 
 
இந்த சலுகை முதல் முறை ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படும். முதல் முறை ரீசார்ஜ் செய்தபின் 70 நாட்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகை அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது 35 நாட்களுக்கு வழங்கப்படும். 
 
மை வோடோபோன் செயலி கொண்டு ரூ.244 ரீசார்ஜ் செய்வோருக்கு 5 சதவிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் டாக்டைமில் சேர்க்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்