ஓவர் நைட்டில் காஸ்ட்லி ஆகும் வோடஃபோன் ஐடியா: புதிய விலைப்பட்டியல் இதோ...

திங்கள், 2 டிசம்பர் 2019 (18:14 IST)
இன்று நள்ளிரவு முதல் வோடஃபோன் கட்டண உயர்வு அமலாக உள்ள நிலையில் புதிய ரீசார்ஜ் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த காலாண்டில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 50,922 கோடி இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சேவை கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் 40% கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. வோடஃபோன் ஐடியாவின் புதிய ரீசார்ஜ் விலைப்பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வோடஃபோனின் புதிய விலைப்பட்டியல் இதோ... 
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ்:
1. ரூ. 149 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, தினமும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. 
2. ரூ. 249 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
3. ரூ. 299 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. 
4. ரூ. 399 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. 
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ்:
1. ரூ. 379  திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு மாதத்திற்கு 6 ஜிபி டேட்டா, 1000 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
2. ரூ. 599 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. 
3. ரூ. 699 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி. டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ்:
1. ரூ. 1499 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மாதத்திற்கு 24 ஜிபி டேட்டா, 3600 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
2. ரூ. 2399 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்