ஆறு மாத வரம்பற்ற டேட்டா... பிஎஸ்என்எல் அதிரடியின் உச்சம்!!!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (14:47 IST)
ஆறு மாதங்களுக்கு வரம்பற்ற டேட்டா சேவைகளை வழங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதனை ரூ.249 மட்டும் செலுத்தி வரம்பற்ற இண்டர்நெட் டேட்டாவுடன், ஞாயிற்றுக் கிழமை மற்றும் இரவு நேரங்களில் இலவச அழைப்புகளையும் பெறலாம்.

 
இத்திட்டம் புதிய பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. 
 
அன்-லிமிட்டெட் சேவை: 
 
ரூ.249 திட்டத்தில் வரம்பற்ற இண்டர்நெட் சேவையைப் பெற முடியும். இதை தவிர்த்து அன்-லிமிட்டெட் பிரவுஸிங், அப்லோடிங், டவுன்லோடிங் மற்றும் இலவச அழைப்புகளும் வழங்கப்படும்.
 
1ஜிபி வரையிலான இண்டர்நெட் வேகம் நொடிக்கு 2 எம்பி என்ற விதத்தில் கிடைக்கும். 1ஜிபி இண்டர்நெட் அளவைக் கடந்ததும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பியாகக் குறைக்கப்படும்.
 
சேவை வரி:
 
மொத்த கட்டணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.249 திட்டத்தை ஆக்டிவேட் செய்யும் போது 15 சதவீத சேவை வரி உட்பட மொத்தம் ரூ.287 வரை கட்டணம் இருக்கும்.
 
லேண்ட்லைன்:
 
பிஎஸ்என்எல் ரூ.249 திட்டத்தில் அன்-லிமிட்டெட் லேண்ட்லைன் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வாரத்தில் 6 நாட்கள் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகளையும், ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுக்க இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
 
மைக்ரேஷன்:
 
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.249 திட்டமானது முதல் 180 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதன் பின் பிஎஸ்என்எல் ரூ.449 திட்டத்திற்குத் தானாக மாற்றப்படுவர். பயனர்கள் விரும்பினால் வேறு திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.
 
முன்பணம்: 
 
இத்திட்டத்துடன் சில வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வாடகையுடன் லேண்ட்லைன் முன்பண கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகின்றது.
 
மோடெம்:
 
பிஎஸ்எனல் ரூ.249/- திட்டத்துடன் பயனர்கள் எவ்வித பிராட்பேண்ட் மோடெம்களையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்த கட்டுரையில்