பாஸ்வேர்டுகளை உடைக்க தெர்மல் கேமரா: ஹேக்கர்களின் யுக்தி!!

திங்கள், 13 மார்ச் 2017 (10:40 IST)
தெர்மல் கேமரா உதவியுடன் ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் எளிதாக திருடிவிடுவார்கள் எச்சரித்துள்ளனர்.


 
 
பெரும்பாலும், ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்கள் தகவல்களை பாதுகாக்க மொபைலில் பேட்டர்ன் லாக், நம்பர் லாக், பாஸ்வேர்டு போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். 
 
எந்த லாக்கை பயன்படுத்தினாலும், ஸ்மார்ட்போனின் திரையில் நமது விரல்களை வைத்துதான் இந்த பாஸ்வேர்டுகளை எடுக்க வேண்டும். 
 
இவ்வாறு கைகளை பயன்படுத்தி போனை அன்லாக் செய்யும் போது ஸ்மார்ட்போன் திரையில் நமது கைகளில் உள்ள வெப்பம் சுமார் 30 விநாடிகள் நீடிக்கும். 
 
அப்போது தெர்மல் இமேஜிங் கேரமா என்றழைக்கப்படும் வெப்ப உமிழ் கேரமா மூலம் அந்த பாஸ்வேர்டுகளை புகைப்படம் எளிதாக ஹேக்கர்கள் திருடிவிட வாய்ப்புள்ளது என ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்