இந்தியாவின் மிக சிறிய மற்றும் மலிவானக் கார் என அறிமுகப்படுத்தப்பட்ட நானோகார்களின்உற்பத்தியையும், விற்பனையையும்நிறுத்தடாடாமோட்டார்ஸ்நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
உலகளவில் மிக விலை குறைவான சிறியக் காரை உருவாக்குவதற்காக முயற்சித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2008ஆம் ஆண்டில் நானோ காரை அறிமுகப்படுத்தியது. அதன் விலை அப்போது 1 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களின் விலையில் குடும்பமாக செல்ல உதவும் காராக விளம்பரப்படுத்த நானோக் கார்கள் சந்தையில் நல்ல விற்பனை ஆனாலும் கார்களின் பயன்பாட்டி நிறையக் குறைகள் கூறப்பட்டன. எளிதாக வெப்பமடைதல் மற்றும்ம் இடவசதிக் குறைவு போன்றக் காரணங்களால் சந்தையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
அதனால் டாடா நிறுவனமும் படிப்படியாக நானோக் கார் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு வந்தது. கடந்த ஜூன் மாதத்தில் டாடா நிறுவனம் வெறும் நான்கு நானோ கார்களை மட்டுமே உற்பத்தி செய்தது.அதனால் இப்போது இந்த நானோ கார் உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்துள்ளது. பி.எஸ்-6 தரநிலைகள் அமலுக்கு வந்தபிறகு 2020 ஆம் ஆண்டு எபரல் முதல் நானோ கார்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
இந்தியக் கார் சந்தையில் மிகப்பெரியப் பங்கை வகித்து வரும் டாடா மோட்டார்ஸ் நானோவுடன் இன்னும் சில கார்களையும் நிறுத்தி விட்டு புதிய மாடல்களை உருவாக்க இருக்கிறது. உலகின் மிகக் குறைந்த விலை கார் என அறிமுகப்படுத்தப்பட்ட நானோ 12 ஆண்டுகளில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருக்கிறது.