பண பரிவர்த்தனைக்கான பிரத்யேக ஸ்மார்ட்போன்!!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (10:25 IST)
புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு கிரெடிட், டெபிட் கார்டு, மொபைல் வாலட் போன்ற பணமற்ற பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது.


 
 
மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுகளையும் அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால், மொபைல் வாலட் பயன்படுத்த ஸ்மார்ட்போன் அவசியமானது. 
 
எனவே, இதற்கேற்ப அனைவரும் ஸ்மார்ட்போன் வாங்கும் வகையில் ரூ.2,000க்கு உட்பட்ட விலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க வேண்டும் என உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 
 
சமீபத்தில் தான் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், சீன நிறுவனங்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்படவில்லை. 
 
இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனைக்கு கைரேகை ஸ்கேன், உயர் தர பிராசஸர் ஆகியவையும் இருக்க வேண்டும் என  மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்