விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான்" என அனுராக் தாக்கூர் கூறிய கருத்தில் என்ன தவறு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் பூர்வமாக விண்வெளிப் பயணம் குறித்த தகவல்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கருத்து பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
"விண்வெளிக்கு முதன்முதலில் சென்றது அனுமன்" என அனுராக் தாக்கூர் பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அனுராக் தாக்கூர் மக்கள் நம்பும் இதிகாசத்தில் உள்ளதைத்தான் கூறினார். அவர் சொன்னதில் என்ன தவறு? நாம் இதிகாசத்தில் இருப்பதை சொல்வதில் என்ன தவறு?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அனுராக் தாக்கூர் கூறிய கருத்து, அறிவியல் மற்றும் புராண நம்பிக்கைகளுக்கு இடையிலான மோதலை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இதற்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் கருத்துத் தெரிவித்தது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.