ரூபே கார்ட் பரிவர்த்தனை பற்றி தெரியுமா??

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2016 (12:02 IST)
நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) மூலம் தொடங்கப்பட்டது ரூபே கார்ட். இது ஒரு இந்திய உள்நாட்டு கார்ட் திட்டமாகும். ரிசர்வ் வங்கியின் பூர்ண தேவையை நிறைவேற்ற உருவாக்கப்பட்டது.


 
 
ரூபே கார்ட் ஆனது மாஸ்டர் மற்றும் விசா போன்ற அதிகாரப்பூர்வ கார்ட் கட்டண நெட்வொர்க் ஆகும். அது வெளிநாடுகளில் செயலாக்கம் கொண்ட விசா டெபிட் கார்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த பரிவர்த்தனை செலவுகளை கொண்டது.
 
பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு ரூபே கார்டு பயன்பாடு ஏழு மடங்கு உயர்ந்து உள்ளதாக நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 
 
முன்பு ஒரு நாளைக்கு 3 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்தன. ஆனால் இப்போது 21 லட்சம் பரிவர்த்தனைகள் நடப்பதாக என்சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
 
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ரூபே கார்டுகள் மூலமாக 50 லட்சம் பரிவர்த்தனைகள் நடப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதுவரை 31.7 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் ஜன் தன் வங்கி கணக்குக்காக 20.5 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்