ரூ.5,090க்கு சாம்சங் கேலக்ஸி S7; ப்ளிப்கார்ட் அதிரடி ஆஃபர்

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (16:12 IST)
ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.29,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S7 மொபைல் போன் தற்போது ரூ.5,090க்கு விற்பனைக்கு உள்ளது.


 

 
ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவில் முன்னணி வகுக்கும் ப்ளிப்கார்ட் நிறுவனம் அமேசானுடன் போட்டி போட்டு சலுகைகளை வழங்கி வருகிறது. முன்பு ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் போட்டி போட்டு கொண்டிருந்த ப்ளிப்கார்ட் தற்போது உலகளவில் முன்னணியில் இருக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானுடன் போட்டியில் உள்ளது.
 
ப்ளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டே சேல் என்று அதிரடி சலுகைகளை வழங்குவது வழக்கம். அவ்வப்போது ஸ்மார்ட்போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்குவதும் வழக்கம். அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி S7 மொபைல் போனுக்கு ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கியுள்ளது.
 
இதன்படி ரூ.29,990 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ரூ.5,090க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த சலுகையை ஐபோன் 7 பிளஸ் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்