சலுகைகளுடன் இன்று பிளாஷ் விற்பனைக்கு வரும் ரெட்மி 4A!!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (10:22 IST)
அமேசான் இந்தியா தளத்தில் ரெட்மி 4A இன்று மதியம் 12.00 மணிக்கு பிளாஷ் விற்பனைக்கு வருகிறது. 


 

 
ரெட்மி 4A ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ரூ.5,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
இன்றைய விற்பனையில் ரெட்மி 4A வாங்குவோருக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது. இலவச டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சியோமி ரெட்மி 4A வாங்குவோருக்கு ஐடியா நிறுவனம் 28ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது. வோடோபோன் நிறுவனமும் சில டேட்டா சலுகைகளை வழங்குவதாக தெரிகிறது.
 
சிறப்பமசங்கள்:
 
# 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 2 ஜிபி ராம்,
 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 
 
# 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3120 எம்ஏஎச் பேட்டரி.
 
அடுத்த கட்டுரையில்