1 ரூபாய் மிட்டாய் ஆனால் ரூ.300 கோடி வருமானம்: எப்படி தெரியுமா??

வியாழன், 9 மார்ச் 2017 (10:40 IST)
ஒரு ரூபாய் விலையில் மிட்டாய் விற்று, ரூ.300 கோடி வருமானம் ஈட்டி டிஎஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.


 
 
நுகர்பொருள் சந்தையில் சீனா, அமெரிக்கா மத்தியில் இந்தியா பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இதனால், இந்திய பல்பொருள் வர்த்தக சந்தை வளர்ச்சி அடைந்துள்ளது.
 
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் டிஎஸ் நிறுவனம், ரூ.1 விலையுள்ள பல்ஸ் மிட்டாய்களை விற்றே, இந்திய அளவில் ரூ.300 கோடி வர்த்தகம் செய்துள்ளது.
 
இந்திய நுகர்பொருட்கள் சந்தையில் உள்ள ஓரியோ, மார்ஸ் பார் போன்ற நிறுவனங்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து முயன்றும் ரூ.300 கோடி ஆண்டு வர்த்தகத்தை எட்ட முடியவில்லை. 
 
இந்நிலையில், மிட்டாய் விற்று, டிஎஸ் குழுமம் இந்த சாதனை படைத்துள்ளதை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வியப்புடன் பார்க்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்