சியோமி மலிவு விலை மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமாக இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில், சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் Mi A1 கடந்த செப்டம்பர் மாதம் ரூ.14,999 விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் ரூ.2,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டது.
இதே விலையில் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது.
# ஸ்மார்ட்போனை தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
# விலை குறைப்பிற்கு பின்னர் சியோமி Mi A1 ஸ்மார்ட்போனினை ரூ.13,999 விலையில் வாங்க முடியும்.