பிஎப் பணத்தை பயன்படுத்தி வீடு வாங்க முடியும்

திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (10:36 IST)
வருங்கால வைப்பு நிதியை அடமானம் வைத்து பணியாளர்கள் வீடு வாங்கிக்கொள்வதற்கான திட்டத்தை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) விரைவில் கொண்டு வர இருக்கிறது.


 


மேலும் எதிர்காலங்களில் செலுத்த வேண்டிய கடன் தொகையை பிஎப் பணத்தில் இருந்து மாதாந்திர தவணை தொகையாக கட்டிக்கொள்ளும் வசதியையும் கொண்டு வர இருக்கிறது. இதன் மூலம் 4 கோடி பிஎப் சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.

இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சங்கர் அகர்வால், பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது பிஎப் பணத்தை பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை கொண்டு வர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த முன்வரைவை அடுத்த மாதம் இபிஎப்ஓ அறங்காவலர் கூட்டத்தின் முன்பு வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இபிஎப்ஓ அறங்காவலர் குழு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய பிறகு இந்த திட்டத்தை சந்தாதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் சந்தாதாரர்கள் எவ்வளவு தொகை வரை பயன்படுத்தி வீடு வாங்க முடியும், இந்த திட்டத்தின் கீழ் பயனடைவதற்கு என்னென்ன வரைமுறைகள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்