ஊழியர்களை கோடீஸ்வரர்களாக மாற்றிய பேடிஎம்

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (19:33 IST)
பேடிஎம் நிறுவனம் ஊழியர்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

 
இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் சேவை நிறுவனமாக பேடிஎம் தனது வியாபாரத்தை பெரிய அலவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. புதிய முதலீடுகளை பெற முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்துக்கு சொந்தமான பங்குகளை முதலீடு செய்ய முடிவு செய்தது. 
 
பின்னர் பல்வேறு ஆலோசனைக்கு பிறகு தற்போது இருக்கும் முதலீட்டாளர்களை இழக்க வேண்டாம் என்று முடிவெடுத்து ஊழியர்களிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. அதன்படி சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான ஊழியர்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.
 
இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். ஊழியர்களின் பங்குகளை விற்பனை செய்வதை கடந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்