இந்திய சந்தையில் முன்னிலையில் வகிக்க துடிக்கும் பதஞ்சலி நிறுவனம்

சனி, 8 ஜூலை 2017 (16:30 IST)
பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா தேவ் ராம், நிறுவனத்தின் மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு தொழில் ஈடுப்பட்டுள்ள உள்நாட்டு தயாரிப்பான பதஞ்சலி நிறுவனம் இயற்கை என கூறி ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் ராணுவ உணவகத்தில் விற்கப்படும் ஆம்லா நெல்லிச்சாறு குடிக்க தகுந்தது அல்ல என்று தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பதஞ்சலி நிறுவனத்தின் தேன், பற்பசை ஆகிய பொருட்களும் தரம் குறைந்தது என்று கூறப்பட்டது. 
 
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் நடைப்பெற்ற நான்காவது வங்கிகள் மற்றும் பொருளாதாரவியலாளர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பாபா ராம் தேவ் கூறியதாவது:-
 
பதஞ்சலி நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.5,000 கோடியாக உள்ளது. வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கைக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் மிகப்பெரிய உணவுப் பூங்கா ஒன்றை ஹரித்துவாரில் அமைத்துள்ளோம் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்