பொதுஜனங்களின் கவனத்திற்கு... பான் - ஆதாரை இணைக்க 2 நாளே கெடு!

சனி, 28 செப்டம்பர் 2019 (11:23 IST)
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாளில் முடிய உள்ளது. 
 
மத்திய அரசு பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் அளித்தது. அதன் பின்னர் கால அவகாசம் நீடிக்கப்பட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. 
 
எனவே, இரண்டு நாளிற்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் பான் கார் பயனில்லாமால் போய்விடும் அல்லது முடப்படும் என தெரிகிறது. 
 
பான் கார்ட் முடக்கப்பட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது, 
1. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. 
2. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. 
3. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்ட் முக்கிய ஆவணம் எனவே, வங்கிகளிலும் சிக்கல் ஏற்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்