ஓலா கார் சேவை நிறுவனம்: தினசரி ரூ.6 கோடி நஷ்டம்!!

செவ்வாய், 2 மே 2017 (10:33 IST)
கடந்த 2015- 2016 ஆம் ஆண்டில் ஓலா நிறுவனத்தின் தினசரி நஷ்டம் ரூ.6 கோடி என தெரியவந்துள்ளது.


 
 
இந்தியாவில் தற்போது 119 நகரங்களில் இயங்கி வரும் ஓலாவில் கார், ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்ட 6 லட்ச வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
 
பெங்களூரைச் சேர்ந்த ஓலா நிறுவனம் கடந்த நிதியாண்டில் மொத்தமாக ரூ.2,311 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதிக விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் பணியாளர்கள் கட்டணங்களால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
மேலும், உபர் கார் சேவையுடனான போட்டியதை சமாளிக்க ஓலா கூடுதலாக செலவளித்திருப்பது நஷ்டத்து காரணமாக கூறப்பட்டுள்ளது. உபர் நிறுவனம் 29 நகரங்களில் மட்டுமே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்