டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டு மற்றும் பீம் செயலி மூலம் ரூ.2000 வரையிலான பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பணமதிப்பிழப்புக்கு பின் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெபிட் கார்டு மற்றும் பீம் செயலி மூலம் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனைக்கான கட்டணத்தை அரசே ஏற்பதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும் இதனால் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.