ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (10:38 IST)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 


 
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபிபவுடர், புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்று கலிபோர்னியாவை சேர்ந்த டெப்ரோஹ் கியானெச்சினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கியானெச்சினிக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்புகளும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று கிட்டத்தட்ட 1,700 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு வழக்குகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 7.2 கோடி டாலர் மற்றும் 5.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று செயின்ட் லூயிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது மூன்றாவது வழக்காக கியானெச்சினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
புற்றுநோய் ஏற்பட ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் காரணமல்ல என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கரோல் குட்ரிச் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்