எஸ்பிஐ-க்கு இணையாக ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள் செய்யும் வேலை!!

புதன், 17 மே 2017 (10:14 IST)
சில நாட்களுக்கு முன்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்தது. இதனால் தனியார் வங்கிகளும் எஸ்பிஐ வங்கிற்கு இணையான வட்டியை அறிவித்துள்ளது. 


 
 
தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் கடனுக்கு 8.35 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதம் அளவிலான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்துள்ளது.
 
அதேபோல் எச்டிஎப்சி வங்கி பாலின பாகுப்பாடு இல்லாமல் 30 முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 8.5 சதவீதம் வட்டியும், 75 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடனுக்கு 8.55 சதவீதம் வட்டியையும் நிர்ணயித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்