இந்தியாவைப் போன்று புதிய நோட்டுகளை மாற்ற முயன்று தோல்விகளை சந்தித்த உலகளாவிய ஐந்து நாடுகளின் தொகுப்பு.
சோவியத் ஒன்றியம்:
1991 ஜனவரியில் கோர்பச்சேவ் தலைமையின் கீழ் கருப்புப் பணத்தை ஒழிக்க முயற்சி செய்து பெறும் பணவீக்கத்தை சந்தித்தது.
அது மட்டும் அல்லாமல் இரண்டும் முறை முயன்றும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா:
கிம் ஜாங்-II கருப்புப் பணத்தை மூடக்க நாணயத்தில் இருந்து இரண்டு பூஜியங்களை குறைக்க முயன்று தோல்வியைச் சந்தித்தார்.
இதனால் விவசாயம் முதல் அனைத்துத் துறைகளிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இது இல்லாமல் மக்கள் உணவுக்குப் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டது.
மியான்மர்:
1987 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியின் போது நாட்டின் மொத்த பண மதிப்பில் 80 சதவீதத்தைச் செல்லா பணமாக அறிவித்தது.
ஆனால், இது பெறும் போராட்டத்திற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது.
கானா:
1982 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு, ஊழல் மற்றும் அதிகப்படியான பணப்புழக்கம் போன்றவற்றைக் குறைக்க 50 செடி நோட்டைக் குறைக்க முயன்று தோல்வியை சந்தித்தது.
அந்தச் சமயத்தில் மக்கள் பல மையில் நடந்து சென்று வங்கிகளில் பணத்தை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நைஜீரியா:
1984 ஆம் ஆண்டு முகமது புகாரியின் கீழ் ராணுவ ஆட்சியின் போது ஊழலை ஒழிக்கப் பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திக் குறைந்த காலக்கெடுவில் மக்களிடம் வற்புறத்த முயன்று தோல்வியை சந்தித்தனர்.
நாணய சீர்திருத்தம் மேற்கொண்டு இங்கிலாந்து அரசு வெற்றி கண்டுள்ளது. இதே போல் இந்திய அரசும் இச்செயலில் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.