2019ம் ஆண்டு முடிந்து 2020ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், பலரும் புதிய வருடம் குறித்து பலத்தரப்பட்ட திட்டங்கள் வகுத்து வருகின்றனர். இந்த ஆண்டில் பொருளாதார சரிவால் ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் இது அடுத்த ஆண்டும் அதிகரிக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது எந்த பட்டம் பெற்றிருந்தாலும் செய்யக்கூடிய வேலைகள் மிகவும் குறைந்து வருவதாகவும், குறிப்பிட்ட துறை சார்ந்த கல்வி, அனுபவம் பெற்றவர்களையே நிறுவனங்கள் பல பணிக்கு அமர்த்த விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டிலேயே சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாகவும், படித்து பட்டம் பெற்ற பலர் தங்கள் துறைரீதியான வேலைகளில் ஈடுபட முடியாமல் கிடைத்த பணிகளை செய்து வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.