வங்கி கிளைகள் மூட வலியுறுத்தும் நிதியமைச்சகம்

புதன், 27 டிசம்பர் 2017 (11:38 IST)
பொதுத்துறை வங்கி நிறுவனங்களின் நஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும் என்று நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 
பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வரா கடன் அளவினை குறைப்பதற்காக நஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட நிதியமைச்சகம் வங்கி நிராவாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை தொடர்ந்து நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை. 
 
இதனால் இதுபோன்ற கூடுதல் செலவுகளை குறைக்க நிதியமைச்சகம் வங்கிகளுக்கு வங்கி கிளைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐ வங்கி தனது பல வங்கி கிளைகளை மூடி வருகிறது. இதைத்தொடர்ந்து ஐ.ஓ.பி உள்ளிட்ட பல வங்கிகள் தங்களது கிளைகளை மூடி வருகின்றனர்.
 
மேலும் ஒரு நாட்டில் அதிக அளவிலான வங்கி கிளைகளை நடத்த விருப்பமில்லை என நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்