யாரை ஏமாற்ற இந்த இலவச திட்டம்? லாபம் பார்க்கப்போகும் முகேஷ் அம்பானி; அம்பேலாக போகும் வாடிக்கையாளர்கள்!!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (16:00 IST)
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. ஆனால், செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.


 
 
கட்டப்படும் இந்த செக்யூரிட்டி டெபாசிட் பணம் 3 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த மேலோட்டமான தகவலை வைத்து பார்க்கும் பொழுது இது வாடிக்கையாளர்களுக்கு லாபமாக இருக்கு என்பது போல தெரியும்.
 
ஆனால், உண்மையில் இதனால் லாபம் பார்க்கப்போவது முகேஷ் அம்பானிதான். ஒரு சில மாஸ்டர் திட்டங்களை தீட்டிதான் இந்த இலவச ஜியோ போனை வழங்கியுள்ளார் அம்பானி.
 
டெலிகாம் சேவையின் மீதான வரி 15% இருந்து 18% உயர்ந்துள்ளது. செக்யூரிட்டி டெபாசிட்டிற்கு ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை. ஆக இலவச போன் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் ரூ.1500-ஐ முழுமையாக தனது நிறுவனத்தில் முதலீடு செய்து லாபம் பெருவார். 
 
உதாரணத்திற்கு, ஜியோ சேவையை பயன்படுத்தும் 125 மில்லியன் வாடிக்கையாளர்கள் இலவச போன் பெற்றால் அம்பானிக்கு ரூ.18,750 கோடி ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட்டாக கிடைக்கும். இந்த பணம் மொத்தமும் அவருக்குதான் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
 
அதே போல், போன் வாங்கினால் மாதம் ரூ.153 ரீசார்ஜ் செய்ய வேண்டும். கணக்கின் படி மூன்று வருடத்திற்கு ஒரு வாடிக்கையாளர் ரூ.5,508 செலுத்த வேண்டும். எனவே, எப்படி கூட்டி கழித்தாலும் லாபம் காணப்போவது அம்பானி தானே தவிர வாடிக்கையாளர்கள் இல்லை.
 
அடுத்த கட்டுரையில்