9 மாத சம்பளத்துடன் அதிகாரிகளை வேலையை விட்டு தூக்கும் காக்னிசன்ட்!!

Webdunia
வியாழன், 4 மே 2017 (17:55 IST)
கான்னிசன்ட்ல் நிறுவனம் அங்கு பணியாற்றும் மூத்த ஊழியர்களிடம், 9 மாத சம்பளத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
உயர்தர வளர்ச்சிக்காக மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறி செல்லும் போது இது போன்ற நடவடிக்கைகள் அவசியமானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதனால் வழக்கமான பணிகளில் எந்த பாதிப்பும் வர வாய்ப்புகள் இல்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.டி. பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர், தமிழக தொழிலாளர் நல ஆணையரிடம் இன்று புகாரளித்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்