மாசம் பொறந்து 15 நாள் ஆச்சு; இன்னும் சம்பளம் கொடுக்கல.. நஷ்டத்தில் பிஎஸ்என்எல்

வெள்ளி, 15 மார்ச் 2019 (15:52 IST)
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 
 
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உள்ள தனது 1.76 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. மாதம் பிறந்து 15 நாட்களாகியும் சம்பளம் தராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிஎஸ்என்எல் இது போன்று சம்பளம் தராமல் இருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் சம்பளமின்றி சமாளித்துக் கொண்டாலும், சாதாரண ஊழியர்களுக்கு இது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 
பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் செல்வதால்தான் இன்னும் சம்பளம் போடப்படவில்லை என கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்படும் என பிஎஸ்என்எல் தரப்பு தெரிவித்துள்ளது. 
 
மேலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் கிடைக்கும் வருவாயை முதலில் சம்பளம் கொடுக்கவே பயன்படுத்தப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்