ஒன்பது மாதத்தில் ரூ.4,890 கோடிகளை இழந்த பி.எஸ்.என்.எல்!!
செவ்வாய், 31 ஜனவரி 2017 (10:07 IST)
பிரபல தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்- டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் ரூ.4,890 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் பி.எஸ்.என்.எல். கடந்த 2016 ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் ஒட்டுமொத்தமாக ரூ.4,890 கோடியை இழந்துள்ளது.
எனினும், முந்தைய 2015 ஆம் ஆண்டின் இழப்பை விட இது குறைவாகும். வருவாயைப் பொருத்தவரையில், மேற்கூறிய ஒன்பது மாதங்களில் ரூ.19,380 கோடி வருவாய் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டின் வருவாயை விட 6 சதவிகிதம் கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், 7.8 கோடி பேர் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 9.4 கோடியாக உயர்ந்துள்ளது.