இதுநாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் அவுட்கோயிங் கால்களுக்கான ரிங்கிங் நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் ரிலையன் ஜியோ நிறுவனம் தனது ரிங்கின் நேரத்தை அதிரடியாக் 20 விநாடிகளாக குறைத்தது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது, தனது ரிங்கிங் நேரத்தை 24 விநாடிகளாக குறைக்க உள்ளோம் என டிராய்-க்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், வோடபோன் ஐடியா நிறுவனமும் அடுத்து தனது ரிங்கிங் நேரத்தை குறைக்கும் என எதிர்ப்பார்க்க்கப்படுகிறது.