மேலும் 3 மாதங்களுக்கு இலவச டேட்டா: ஏர்டெல் அதிரடி!!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (16:16 IST)
ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் அறிவித்த சலுகை ஒன்றை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்து உள்ளது.


 
 
சில மாதங்களுக்கு முன்னர் 30 ஜிபி இலவச டேட்டாவை மாதம் 10 ஜிபி அளவு 3 மாதங்களுக்கு வழங்கி வந்தது. 
 
தற்போது மைஏர்டெல் செயலி மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச டேட்டாவை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துயுள்ளது.
 
இந்த சலுகையை பயன்படுத்தி மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச டேட்டாவை பெறலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது. 
 
இந்த சலுகை மைஏர்டெல் செயலியில் ஜூலை ஒன்று முதல் அளிக்கப்படும் என்றும், இதற்கான வேலிடிட்டி செப்டம்பர் 2017 எனவும் அறிவித்துள்ளது. 
 
அடுத்த கட்டுரையில்