ஏர்செல் அதிரடி ஆஃபர்: ரூ:249க்கு அனைத்தும் இலவசம்

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (22:01 IST)
ரூ.249க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் இந்தியா முழுவதும் இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். மேலும் அளவற்ற டேட்டா இலவசம்.


 

 
ஐடியா, வோடாபோன்மற்றும் ஏர்டெல் அகிய நிறுவனங்களை தொடர்ந்து ஏர்செல் நிறுவனமும் அதிரடி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.14 மற்றும் ரூ.249 ஆகிய இரண்டு வகை சலுகைகளை அறிவித்துள்ளது.
 
ரூ.14க்கு ரிசார்ஜ் செய்தால் ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். ரூ.249க்கு ரிசார்ஞ் செய்தால் 28 நாட்களுக்கு இந்தியா முழுவதும் அனைத்தும் கால்களும் இலவசம். 
 
மேலும் 2ஜி அளவற்ற டேட்டே பேக் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ நிறுவனம் அதன் இலவச சேவையை மார்ச் மாதம் வரை நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மற்ற அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடி சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அடுத்த கட்டுரையில்