ரூ.849-க்கு டிக்கெட்: ஏர் ஏசியா மெகா ஆஃபர்!

செவ்வாய், 27 மார்ச் 2018 (14:25 IST)
ஏர் ஏசியா நிறுவனம் உள்நாட்டு விமான பயணங்களுக்கான அனைத்து கட்டணங்களும் உள்ளடக்கிய டிக்கெட்களை சலுகை விலையில் விற்பனை செய்கிறது. டிக்கெட் விலை ரூ.849 முதல் துவங்குகிறது. 
 
சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, ராஞ்சி போன்ற முக்கிய தடங்களில் பயணம் செய்ய ஏர் ஏசியா டிக்கெட் விலையை குறைத்து அறிவித்துள்ளது. இந்த சலுகையில் 2018 அக்டோபர் 1 முதல் 2019 மே 28 வரை விமான பயண டிக்கெட்களை 2018 ஏப்ரல் 1 தேதி வரை புக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டிக்கெட் விலை விவரம்: 
 
புவனேஷ்வர் - ராஞ்சி செல்ல 849 ரூபாய் 
பெங்களூரு - சென்னை செல்ல 879 ரூபாய் 
புவேன்ஷவர் - கொல்கத்தா செல்ல 869 ரூபாய் 
கொச்சி-பெங்களூரு, இம்பால் - கவுகாத்தி, பெங்களூரு - கொச்சி செல்ல 879 ரூபாய்
புவனேஷ்வர் - பெங்களூரு செல்ல 1,499 ரூபாய் 
 
ஏர் ஏசியாவின் இந்த சலுகை விலை டிக்கெட் www.airasia.com இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்