ஏடிஎம் கார்டு பயனாளர்கள் எச்சரிக்கை: 32 லட்சம் கார்டுகளின் தகவல்கள் திருட்டு

வியாழன், 20 அக்டோபர் 2016 (19:33 IST)
இந்தியாவில் முன்னணி வங்கிகளின் 32 லட்சம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டு தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
நமது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒன்றான ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை பிறரிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது நமது கட்டாயம்.
 
சில நேரங்களில் நம்மையும் மீறி தகவல்கள் திருட்டு போய் விடுகின்றன. அதேபோல் தற்போது முன்னணி வங்கிகளான SBI, ICICI, HDFC, AXIS, போன்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு தகவல்கள் திருடு போய் உள்ளன.
 
ஏடிஎம் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹிடாச்சியின் கம்ப்யூட்டர்களில் தான் முதலில் இந்த தகவல் திருட்டு நடைப்பெற்றுள்ளது. திருடப்பட்ட டெபிட் கார்டுகள் சீனாவில் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
 
இதையடுத்து தகவல் திருடப்பட்டிருக்கும் ஏடிஎம் கார்டுகளை முடக்கும் நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டுள்ளன. உடனடியாக பின் எண்ணை மற்றும் படி வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர். 
 
ஸ்டேட் பேங்க் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6.25 ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது. அதோடு முடக்கம் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்