ஒரு லட்சம், ஒரு கோடியாய் ஆனது: ரிலையன்ஸ் முதலீடு!!

புதன், 10 மே 2017 (10:11 IST)
1995 ஆம் ஆண்டு முதல் முறையாக ரூ.1,000 மதிப்பில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் மேனேஜ்மெண்ட்டின் ஈக்விட்டி திட்டமான ரிலையன்ஸ் க்ரோத் திட்டம் துவங்கப்பட்டது. 


 
 
இந்த திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் ஒரு லட்சம் 21 வருடத்தில், ஒரு கோடியாகி இருக்கும்.
 
ரூ.10 முதல் ரூ.1,000-மாக இருந்த நிகரச் சொத்து மதிப்பு 21 வருடத்தில் 100 மடங்கு அதிகரித்துள்ளது. நிகரச் சொத்து மதிப்பு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு பங்கின் விலை ஆகும்.
 
ரிலையன்ஸ் க்ரோத் திட்டத்தின் கீழ் நிதி, தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. 
 
இந்தத் திட்டத்தில் துவக்கக் காலத்தில் இருந்து முதலீடு செய்து வந்தவர்கள் இன்று 100 மடங்கு லாபத்தைப் பெற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்