ரூ.2 லட்சத்திற்கு ரொக்கமாக பணமெடுத்தால் 100% அபராதம்!!

சனி, 3 ஜூன் 2017 (13:27 IST)
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் வங்கிகளில் பணம் போடப்படுவது மற்றும் எடுப்பது போன்ற பணபரிவர்த்தனைகளை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது.


 
 
இந்நிலையில், நிதி சட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. 
 
மேலும், ஒரே நாளில் மேற்கண்ட தொகையை ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது ஒரு தொடர்பு பரிவர்த்தனைக்கோ அல்லது தனிநபருக்கு அளிப்பதற்கோ தடைவிதித்துள்ளது.
 
எனவே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்