என்னுடைய ஓய்வு உலகக்கோப்பை முடிவில் உள்ளது- மெஸ்சி

செவ்வாய், 12 ஜூன் 2018 (13:00 IST)
அர்ஜென்டினா அணி கேப்டன் லயனோல் மெஸ்சி தன்னுடைய ஓய்வு உலக்ககோப்பை தொடர் எப்படி முடிகிறது என்பதை பொறுத்து இருக்கும் என தெரிவித்துள்ளார்.
 
அர்ஜென்டினா அணி கேப்டனுமான, ஸ்பேயின் கிளப் பார்சிலோனா அணி கேப்டனுமான லயனோல் மெஸ்சி உலகின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டு வீரர். இவரது தலைமையில் பார்சிலோனா அணி பல முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால், அர்ஜென்டினா அணிக்காக இதுவரை 124 போட்டிகளில் விளையாடியும் இவர் எந்தவொரு முக்கியமான சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்ததில்லை.
 
இதனால் இவர் பலமுறை பத்திரிக்கையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த இவர் பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டார்.
 
இந்நிலையில். வரும் ஜூன் 14ம் தேதி உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. இத்தொடரில் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை பெற்று தராவிட்டால் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இது குறித்து மெஸ்சி கூறியிருப்பதாவது:-
 
“ உலகக்கோப்பைக்கு மூன்று முறை தகுதி பெற்றுள்ளோம். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பத்திர்க்கையாளர்கள் எங்களை கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளுகின்றனர்.
 
உலகக்கோப்பையில் வெற்றி பெறுவதே எங்களுடையே இலக்கு. இந்த தொடர் எப்படி முடிகிறது என்பதை பொறுத்து தான் என்னுடைய ஓய்வு முடிவு உள்ளது” என்றார.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்