போகி பண்டிகையின்போது செய்யப்படும் பூஜை முறைகள் என்ன தெரியுமா...?

Webdunia
தமிழ் வருடத்தின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாகும். போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். 

அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய  எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
 
போகி அன்று விடியற்காலை பழையப்பொருட்களை எல்லாம் ஓர் இடத்தில் குவித்து எரிப்பது வழக்கம். கொட்டு எனப்படும் போகி மோளத்தை கொட்டுவிப்பார்கள்.  இதையொட்டி பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன்  காணப்படும். 
 
இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் ‘நிலைப் பொங்கல்’ நிகழ்வுறும். வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை  வணங்குவர்.
 
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும். அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள்  என்பதால் நடந்து முடிந்த நல்நிகழ்வுகளுக்கு நன்றி கூறுவதோடு, போகிக் பண்டிகையின்போது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய  நாளாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்