ஆஸ்ட்ரேலியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை

புதன், 4 ஜனவரி 2012 (16:30 IST)
சிட்னி: ஆஸ்ட்ரேலியாவில் பல இடங்களில் வெப்ப அளவு கடுமையாக அதிகரித்து வருவதால் அரசு பொதுமக்களுக்கு தீ எச்சரிக்கை விடுத்துள்ளது.

திங்களன்று வெப்பத்தால் ஏற்பட்டுள்ள வியாதிகள் தொடர்பாக 45 நோயாளிகள்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 4 குழந்தைகளும் அடங்கும்.

தெற்கு துறைமுக நகரான அடிலெய்டில் கடந்த ஞாயிறன்று வெப்ப அளவு 41.6 டிகிரி செல்சியாக அதிகரித்து சுட்டெரித்தது.

விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக 43 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அதுவும் மாலை 4 மணி முதல் 5 மணிவரையிலான காலக்கட்டத்தில் வெயில் உச்சத்திற்குச் செல்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காடுகளுக்கு அருகில் அல்லது புதர் பகுதிகளில் வாழும் மக்கள் பெரிய தீயை எதிர்பாருங்கள் எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல மாகாணங்களுக்கு பெரும் தீ அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தீகுறித்த எச்சரிக்கையை புறக்கணிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

வெப்ப நிலை சீராக 40டிகிரி செல்சியஸ் இருக்கும் என்பதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதி தீவிர வெப்பத்தினால் அவசரநிலை படையினர் ஆஸ்ட்ரேலியா முழுதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கிலார்ட் தெஇவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்