என்னங்க தலைப்பு பார்த்த உடனே அய்ய...ன்னு முகத்தை திருப்பிகொள்கிறீகளா..? அட.. நாங்க சொல்ற செய்தி உண்மைதாங்க...
இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நேனோ தொழில்நுட்ப வல்லுனரான சாரா ஹைக் இந்த முயற்சியில இறங்கியிருக்கிறார்.
FILE
அதாவது, மனித கழிவுகளிலிருந்து புதுவிதமான ஆற்றல்களை பெற முடியும்ன்னு அந்த ஆராய்ச்சியாளர் நம்புறார்ங்க.
அவருக்கும் உங்கள மாதிரி என்ன இது ஆய்... கண்டுபிடிப்புன்னு முகம் சுழிக்கிற நண்பர்கள் இருந்திருக்காங்க.. ஆனால் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாம தனது கண்டுபிடிப்புல தீவிரமாகி உள்ளார்.
டாய்லட் கழிவு நீரிலிருந்து, குடிநீராக்கும் இந்த முயற்சிக்கு உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸே நிதி உதவி அளிக்கிறார்ங்கிறார்னா பாருங்களேன்.
ஆராய்ச்சியாளர் சாரா ஹைக் நம்புறது எல்லாம், தனது கண்டுபிடிப்பால சுத்தமான தண்ணீர் கிடைக்காம தவிக்கும் மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்குறதுதாங்க...
இந்த திட்டம் கண்டிப்பாக வெற்றிகரமாக சாத்தியமாகும் என்று ஹைக் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
மாத்தி யோசிங்க...
எல்லாமே சாத்தியம் தான்.
It has been informed that Bill Gates would be funding a machine which would be used for converting the waste water of toilet into drinking water. Sarah Haigh from the Manchester University said that the invention would actually help in making the water safer for drinking