இணையதளம் மூலம் வெளிப்படும் CO2-ன் அளவு 830 மில் டன்!

திங்கள், 7 ஜனவரி 2013 (18:19 IST)
FILE
இணையதளம் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் ஓராண்டுக்கு வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 830 மில்லியன் டன் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் இந்த அளவு வரும் 2020-ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாகும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

தகவல் தொழில்நுட்ப ஆற்றல்-திறன் ஆய்வு மையம் மற்றும் பெல் ஆய்வுக் கூடம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இணையதளம், வீடியோ, வாய்ஸ் மற்றும் இதர தொலைத்தொடர்பு சாதனங்களால் உலகில் 2 சதவீதம் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடப்படுகின்றது. இது விமானங்கள் வெளியிடும் அளவுக்கு இணையானது ஆகும்.

மேலும் இந்த ஆய்வில், பூமியிலிருந்து வெளிப்படும் வெப்பம், கதிர்வீச்சு, கார்பன் படிமங்களை கட்டுப்படுத்தும் மாடல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வகையான உமிழ்வுகளைத் தடுக்க போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும், கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிப்படுத்தும் இயக்கிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கார்பனை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளில் அவற்றைக் கட்டுப்படுத்தும் கருவிகளைப் பொருத்த வேண்டும்.

முக்கியமாக ஆற்றலை சரியாகப் பயன்படுத்துதல், உமிழ்வைக் கட்டுப்படுத்தும் கருவிகளைத் திறம்படப் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி முறையில் ஆற்றலை உருவாக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகிய மூன்றும் மிக முக்கியமான கூறுகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்