அமெரிக்காவின் கறுப்பு மலைகளில் யுரேனியம்! கார்ப்பரேட் சுரண்டல்கள்!

வெள்ளி, 7 மார்ச் 2014 (19:11 IST)
வட அமெரிக்காவின் மகா சமவெளியில், அதாவது மேற்கு டகோடா பகுதியில் ஒரு தனியான சிறிய மலைத்தொடர் உள்ளது. அதுதான் பிளாக் ஹில்ஸ் என்று அழைக்கப்ப்டுகிறது.
FILE

இதன் சிகரம் ஹார்னி சிகரமாகும் இதன் உயரம் 7,244 அடி. இந்த மலைகளில் காணப்படும் இயற்கை கனிம வளங்களை, குறிப்பாக யுரேனியத்தை ஆபத்தான முறையில் சுரண்டி எடுக்கும் நடை முறை அங்கு நடந்தேறி வருகிறது.

இங்கு பூர்வக்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இங்குதான் உலகில் முதல் மனித இனம் தோன்றியதாக கதை வழி புரிதல் உண்டு.

பூர்வக்குடியினரின் சடங்கு சம்பரதாயங்கள் இந்த மலைகளில்தான் காலங்காலமாக நடந்து வருகிறது. இன்று இங்கு காணப்படும் யுரேனிய தாதுக்களுக்காக கார்ப்பரேட் கழுகுகள் அங்கு வட்டமிடத் தொடங்கியுள்ளன.
FILE

யுரேனியம் எடுக்கும் நடவடிக்கையைத் தடுக்கவில்லையெனில் கதிர்வீச்சு அபாயத்தில் அந்த பழங்குடி இனம் சிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் முன்னணி யுரேனியத் தாதுப்பொருள் சுரண்டலில் நிற்கும் நிறுவனம் கனடா நாட்டு பணக்காரர் ஒருவர் நடத்தும் பவர்டெக் என்ற நிறுவனமே. இந்த நிறுவனத்திற்கு 17,800 ஏக்கர்கள் யுரேனியம் தோண்டுதலுக்காக அனுமதி கேட்டுள்ளது.

ஜனவரி மாதம் அமெரிக்காவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு சுற்றுசூழல் மதிப்பீட்டை நிறைவு செய்து யுரேனியத் திட்டத்தை துவங்க அனுமதியும் அளித்து விட்டது. ஆனால் வேறு நில தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டியிருப்பதால் இன்னும் கறுப்பு மலை பிழைத்து வருகிறது.

டூவி-புர்டாக் திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக 8.4 மில்லியன் பவுண்டுகள் யுரேனியம் எடுக்க இலக்கு கொண்டுள்ளது. நேரடியாக தோண்டி எடுக்கும் தொழில் நுட்பம் அல்லாது. என்.எஸ்.எல். தொழில் நுட்பம் மூலம் யுரேனியம் எடுக்க திட்டமிட்டுள்ளது.

மலையை புல்டோசர் வைத்து புரட்டி, இடித்து பெரிய துளைகளைப் போடுவதற்குப் பதிலாக ரசாயனம் நிரம்பிய தண்ணீரை பூமிக்குள் செலுத்தி அதாவது பெரிய அளவில் ரசாயன் நீரை செலுத்தி யுரேனியம் தாதுவைக் கலக்கி பம்ப் செய்து மீண்டும் மேலே கொண்டுவருவதுதான் இந்த புதிய தொழில்நுட்பம். இது பழைய தோண்டுதல் நடவடிக்கையை விட பாதுகாப்பானதாம்.
FILE

இது அப்பகுதியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பையுள்ளது. கனடா நிறுவனம் அல்லாது 8 மிகப்பெரியிஅ கார்ப்பரேஷன்களும் கறுப்பு மலை கனிமவளங்களுக்கு குறிவைத்துள்ளது.

இந்தப்பகுதியின் ஒவ்வொரு சிறு துள் நிலமும் தங்களுக்கு புனிதமானது என்று கூறுகின்றனர். பூர்வக்குடி இந்தியர்கள்.

இப்போதல்ல 1874 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி பூர்வக்குடியினர் கடும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முதலில் தங்கம் வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. தங்கம் இருப்பது தெரியவந்தவுடன் லகோடாவிற்கு அந்த நிலத்தை அளிக்க பெடரல் அரசு மறுத்தது.

ஆனால் 1980ஆம் ஆண்டு நில அபகரிப்பு சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அங்கு விளைவிக்கப்பட்ட சேதத்திற்காக ஒரு பில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கூறியது. ஆனால் லகோடா அந்த பணச்சலுகையை ஏற்க மறுத்தது.

தங்க வேட்டை நீண்ட காலம் முன் முடிந்தடு. தற்போது 1950இற்குப் பிறகே நிறைய சுரங்க நடவடிக்கைகள் அங்கு அதிகரித்துவிட்டது. கடைசியாக 1973இல் சுரங்கம் ஒன்று மூடப்பட்டது. ஆனாலும் பிளாக் ஹில் பகுதியில் கதிர்வீச்சு கழிவுகளின் இடமாக மாறியுள்ளது.

போருக்குப் பிந்தைய அணுசக்தி எழுச்சியில் பூர்வக்குடி இந்தியர்கள் பலரை திறந்தவெளி சுரங்கத்தில் கடுமையான பணியில் ஈடுபடுத்தியது கார்ப்பரேட்கள். அவர்களுக்கு கூலியிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. வெள்ளை உழைப்பாளிகளை விட இவர்களுக்கு அபாயகரமன வேலை கூலியும் குறைவு. இதை இன்னமும் அப்பகுதி பூர்வக்குடியினர் நினைவில் நிறுத்தியுள்ளனர்.

இதனால் பூர்வக்குடியினருக்கு கதிர்வீச்சு தொடர்பான கடும் நோய்கள் ஏற்பட்டன. ஆனால் அதற்காக அவர்களுக்கு ஒன்றுமே செய்யப்படவில்லை. இழப்பீடும் இல்லை.

பூர்வக்குடியினர் அல்லாத பகுதிகளில் சுரங்க நடவடிக்கையினால் விளையும் விபத்துகளுகு நல்ல இழப்பீடு கொடுக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு மறுக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு 'சர்ச் ராக் பேரழிவு' என்று வர்ணிக்கப்படும் ஒரு சம்பவத்தில் சுமார் 1,100 டன்கள் யுரேனியம் கழிவுகளும், 94 மில்லியன் காலன்கள் மாசடைந்த நச்சுத் தண்ணீர் ஆகியவரி நியு மெக்சிகோவின் புயர்கோ நதியில் கொண்டு கொட்டப்பட்டது. இது உள்ளூர் நவாஜோ வகுப்பினரை கடுமையாக பாதித்தது.
FILE

இந்த நிலையில் இந்த புதுவகை தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது என்று கடுமையாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேதங்கள் வெளியில் தெரியாமல் இருக்கவே இந்தத் தொழில் நுட்பம் என்று அங்கு சுற்றுச்சூழல் செயல் வீரர்கள் கூறுகின்றனர்.

யுரேனியத்தை இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்க கனடாவின் பவர்டெக் நிறுவனம் நிமிடம் ஒன்றுக்கு 9000 காலன்கள் தண்ணீர் கேட்டுள்ளது.

நிலத்தடி நீரை பெரிய அளவில் நச்சுமயமாக்காமல் இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியாது என்பதே உண்மை.

இந்த நாசகார திட்டத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்து விட்டது. ஆனால் கடைசி வரை போராடுவோம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சபதம் எடுத்துள்ளனர்.

ஏதோ அமெரிக்கா அவர்கள் ஊர் மக்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் என்றெல்லாம் நம்மிடையே மாயை உள்ளது அங்கும் செலெக்டிவாக சிலருக்குத்தான் பாதுகாப்பு மீதி பேர் நட்டாற்றில்தான் விடப்படுகின்றனர். கார்ப்பரேட் பிடியில் இருக்கும் எந்த நாட்டின் மக்களும் எப்படி நிம்மதியாக நோய் நொடி இன்றி வாழ முடியும்?

இந்தக் கட்டுரை 'தி ஈகாலஜிஸ்ட் என்ற பத்திரிகையின் அமெரிக்க தலைமைச் செய்தியாளர் பென் விட்போர்ட் எழுதிய கட்டுரையின் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்