தேனி மக்களவைத் தேர்தல் 2019 நேரலை | theni Lok Sabha Election 2019 Live Result நேரலை

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (22:26 IST)
[$--lok#2019#state#tamil_nadu--$] 

முக்கிய வேட்பாளர்கள்: ரவிந்திரநாத் (அதிமுக)- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்)
 
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தேனி தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவிந்திரநாத் , திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (இந்திய தேசிய காங்கிரஸ் )தங்கச் தமிழ் செல்வன் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் )போட்டிடுவதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் 75 சதவீத மக்கள் வாக்களித்தனர். தேனி தொகுதியின் மக்கள் தொகை 18,19,376. இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,32,240. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,58,557, ஆகும். பெண்கள் 7,73,506 ஆகும். கடந்த 2014 லோக் சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பார்த்திபன் ஆர். தற்போது  எம்பியாக உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் என்பவரை 3,14,532வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

 
 [$--lok#2019#constituency#tamil_nadu--$] 


தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்