உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் ஓரிதழ் தாமரை !!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (13:50 IST)
ஓரிதழ் தாமரையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. ஓரிதழ் தாமரையின் சமூலத்தின் கசாயம் அருந்தி வர உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. அலர்ஜியை போக்குகிறது.


தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனையை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனையை போக்கும்.

இரத்தில் சக்கரையின் அளவை குறைப்பதோடு இரத்தத்தினையும் சுத்தம் செய்து இரத்த விருத்திக்கு உதவுகின்றது. இதில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகின்றது.

உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். உடலில் கொலஸ்ட்ரோலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

உடல் வலி, உடல் களைப்பு மற்றும் உடல் அசதியை போக்கும் நிவாரணியாகவும் பயன்படுகின்றது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

உடல் வலியை, அசதியை நீக்கும் நிவாரணியாகப் பயன்படுகிறது. இதற்கு காரணம் ஓரிதழ் தாமரையில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் ஓரிதழ் தாமரையைப் பயன்படுத்தும்போது அது இரத்தத்தின் சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்து விடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்