மஞ்சள் - உடலில் நீர்ச்சத்து குறைந்து வருகிறது. பிரவுன் - கல்லீரல் தொற்று, பழைய இரத்தம். சிவப்பு அல்லது பின்க் - தூய இரத்தம் சிறுநீரில் கலந்து வருகிறது. சிறுநீரக கோளாறு, புற்றுநோய். நீளம் அல்லது பச்சை - தவறான மருந்துகள் உட்கொள்ளுதல், உணவில் அதிகபடியான சாயம் கலப்பு.
சிறுநீர் கழிக்கும்போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு, சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி. சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன. காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.