தவசி முருங்கை மூலிகை மருத்துவத்திலும், உணவுத் தயாரிப்பிலும், பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும்.
தவசி முருங்கைக்கு மூக்குத்த பூண்டு என்ற பெயருண்டு. இது குழந்தைகளுக்கு வரும் மாந்தம், தோஷம், வயிற்றுப்பிசம், பொருமல், செரியாமை, வயிற்றில் ஏற்படும் ஒருவகை வலி ஆகியவற்றைப் போக்கும் குணமுடையது. இதன் இலைச்சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர்வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.
தவசி முருங்கையிலை, ஒரு பிடியுடன் கொஞ்சம் உப்பையும், மிளகையும் சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேனும், சேர்த்து ஒரு தேக்கரண்டி வீதம் இருவேளை கொடுத்தால் வயிற்றுப்பிசம் உடனே தணியும்.
தவசு முருங்கையின் தழையை பறித்து கீரை போல் சமைத்து சாப்பிடலாம். இதனால் மூச்சிரைப்பு நோய், இருமல் ஜலதோஷம் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் மாரடைப்பு ஏற்படும் நேரத்தில் இதனை சாறு பிழிந்து 10 சொட்டுகள் வலது மூக்கிலும், 10 சொட்டுகள் இடது மூக்கிலும் விடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.