ஐந்து தினங்கள் வரை கொண்டாடும் இப்பண்டிகையின் நோக்கம் அறியாமை இருளைப் போக்கவும், தீயதை நீக்கி நல்லதை ஏற்கவும், வாழ்வில் நம்பிக்கையூட்டவும், ஆன்மீக ஒளி தீபத்தை ஏற்றும் முகமாக கொண்டாடப்படுகிறது.
தீய குணத்தை எரித்துவிட வேண்டும். தீபத்தில், தீப ஒளியில், ஜீவான்மா வாசம் செய்ய அருள் பெறுவதுதான் ஐதீகத்தோடு கொண்டாடுகின்றனர்.
தீபவளியன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவை, விலங்குகளின் நலன் கருதி சில பகுதிகளில் பட்டாசு இல்லா திருநாளாகக் கொண்டாடியும் வருகின்றனர்.