எச்.ராஜாவும் அவரின் ஆயிரம் அகோரிகளின் நாக்கும்

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (18:07 IST)
ஆண்டாள் யார்? வைணவர்களின் தாய்! சூடிக்கொடுத்த சூடர்க்கொடி! பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்! மார்கழி நோன்பின் பொருள் அவள்! பல கவிகளின் வரப்பிரசாதம் அவள்! பொது வெளிகளில் ஒரு சமூகத்தின் நம்பிக்கை மீது விமர்சனங்கள்/கருத்துக்கள் வைக்கும் போது மிகவும் கவனத்துடன் செயல்ப்பட வேண்டும். அதுவும் வைரமுத்து போன்ற பிரபலமானவர்கள் தங்களின் சொல்லாற்றலை ஆயிரம் முறை கவனமாக பரிசீலித்து கவனமாக கையாண்டு இருக்க வேண்டும்.
 
அதே வேளையில் கருத்துக்களைக் கருத்துகளால் தான் எதிர் கொள்ள வேண்டுமே ஒழிய, உன் தாய் வேசி! நீ வேசி மகன்! என்ற எச்.ராஜாவின் இந்த விமர்சனங்களை எல்லாம், இதுவும் கடந்து போகும் என்று எடுத்து கொள்ளக்கூடாது.
 
எச்.ராஜா யார்? வரலாற்றைத்திரும்பிப் பார்த்தால் அவரை விட அவரின் நாக்குகள் முதலில் வந்து நிற்கிறது. அது தீய மந்திரங்கள் சொல்லும் கொடிய ஆயிரம் அகோரிகளின் நாக்குகளுக்கு சமம். எலும்பில்லாத அவர் நாக்குகள் அது விஷம் கட்க்கும் நாக்குகள். அதுவும் இந்த அதிமுக ஆட்சியில் அவரது நாக்குகள் போடும் ஆட்டம் சொல்லி மாளாது.
 
இந்த அரசு ஏன் இதுப்போன்ற பேச்சுக்களை அனுமதிக்கிறது? ஏன் இந்த அரசு அவர் மேல் வழக்கு பதிவு செய்யவில்லை? எத்தனை இயக்கங்கள் போராடினாலும், எச் ராஜா மீது ஒரு நடவடிக்கையும் இருக்காதா? வைரமுத்துவே! வந்து புகார் தருவார் என்று நினைக்கிறதா? நாளையே அவர் முதலமைச்சரையே வேசி மகன் என்று விமர்சனம் வைக்கட்டும் அது வரை பொறுத்திருப்போம் என்று காத்திருக்கிறதா? இந்த அரசு.
 
முன்பு ஒரு முறை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றார்! பொறுத்துக்கொண்டோம்! நாம் தான் திராவிடக் கழகம் இல்லையே! வைகோவை மன நோயாளி என்றார்! பொறுத்துக்கொண்டோம்! நாம் தான் மதிமுக தொண்டன் இல்லையே! முஸ்லிம்களை, கிருத்துவர்களை விமர்ச்சித்தார்! பொறுத்துக்கொண்டோம்! நாம் தான் ஆண்டி இந்தியன் சோசியல் எலிமண்ட் இல்லையே! தைப் புரட்சியை கேவலப்படுத்தினார்! பொறுத்துக்கொண்டோம்! நாம் தான் நக்சல்கள் இல்லையே! சமீபத்தில் அவர் ஒரு வயதானவர் என்றும் பாராமல் கலைஞர் கருணாநிதியை விமர்ச்சித்தார்! பொறுத்துக்கொண்டோம்! நாம் தான் திமுக தொண்டன் இல்லையே!.
 
தற்போது அவர் வைரமுத்துவை வேசி மகன் என்று விமர்ச்சிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டார். இல்லை! இல்லை! அவரின் நாக்குகள் வளர்த்து விட்டன. தமிழன் தன் வீரத்தையும் தன் மானத்தையும் அடகு வைத்து விட்டான் போலும் அதனால் தான் எச்.ராஜாவையும் அவரின் ஆயிரம் அகோரிகளின் நாக்க்கையும் சகித்து கொண்டு இருக்கிறான்.
 
தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று மட்டும் தான் பள்ளிகளில் சொல்லி தரப்படுகிறது. ஆனால் தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல! அது ஒரு உணர்வு! அது ஒரு எழுச்சி! அந்த எழுச்சியில் தான் அமர்களும், அக்பர்களும், ஆண்டனிகளும், சுவாசித்துக் கொண்டுடிருக்கிறார்கள்! இந்த போகியில் நாம் கழிக்க வேண்டியது எச்.ராஜா போன்றோர்களை தான். எச்.ராஜா நல்லவர் தான். ஆனால் அவரின் ஆயிரம் அகோரி நாக்குகள் தான் வெட்டி வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு தான் திராவிட அரசியல் தேவைப்படுகிறது திராவிட மாவீரர்கள் தேவைப்படுகிறார்கள்.
 
 
- இரா காஜா பந்தா நவாஸ்
Sumai244@gmail.com

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்