அவரைத் தொடர்ந்து கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு காலில் சதை பிடிப்பு ஏற்பட்டதால் அடுத்து வரவிருக்கும் இரண்டு போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது என அறிவித்திருந்தார்.
தற்போது கிரிக்கெட் வீரர் விஜய ஷங்கர், வலைப்பயிற்சியில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது பும்ரா பந்து வீசியதில், கால் கட்டை விரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காயம் காரணமாக ஷிகர் தவான் மற்றும் புவனேஷ் குமார் ஆகியோர் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது விஜய ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதில், விஜய ஷங்கரும் போட்டிகளிலிருந்து விலகிவிடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த செய்தியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், மிகவும் கவலையோடு இருப்பதாக, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.