மேற்கு இந்தியா-வங்கதேச அணிகள் மோதல்:வெற்றி யாருக்கு??

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (15:39 IST)
இங்கிலாந்து நாட்டில் டவுண்டான் நகரில் தற்பொது நடைபெற்று கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் மேற்கு இந்தியா-வங்கதேசம் ஆகிய அணிகள் மோதுகிறது.

மேற்கு இந்திய தீவுகள் அணி, கடந்த 4 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வென்றுள்ளது. வங்கதேச அணியும் இதே நிலையுடன் 4 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வென்றுள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது புள்ளி விவரப் பட்டியலில் 6 ஆவது இடத்திலும், வங்கதேச அணி 8 ஆவது இடத்திலும் இருக்கிறது.

வங்கதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்ததால், மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கில் இறங்கியது.

தற்போதைய நிலவரப்படி மேற்கு இந்திய அணி11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.

பிரபல மேற்கு இந்திய கிரிக்கெட் வீரர் க்ரிஸ் கெயில் 13 பந்துகளை எதிர்கொண்டு டக்-அவுட் ஆன நிலையில் இப்போட்டியில் யார் பக்கம் வெற்றி இருக்கபோகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்